Thursday, January 18, 2007

மோதிர அளவு மட்டும்...

மோதிர அளவு மட்டும்...
உன் விரல்களில் நான்
முத்தம் பதித்த போது
என் இதழ்
உன் விரலின் அளவு எடுத்தது
உண்மைதான்..
ஆனால்
எதையெதையோ பேசத் தெரிந்த
என் உதடுகளுக்கு
அந்த விரலின்
அளவு மட்டும் சொல்லத்
தெரியவில்லையே..
உதட்டில் உள்ளது..
ஆனால் அதை எப்படி
எண்ணாக மாற்றுவது?..