Thursday, November 09, 2006

நீ.. நீ மட்டுமே

என்னிடம் பேசாமல்

எதைப் பற்றி சிந்தனை

என்று கோபித்துக்

கொள்கிறாய்...



பேசிக் கொள்ளும் போது

ஏதேதோ சிந்தனைகள்..

பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில்.

26 Comments:

At Thursday, November 09, 2006 7:29:00 PM, Blogger நன்மனம் said...

//பேசிக் கொள்ளும் போது

ஏதேதோ சிந்தனைகள்..//

சில சமயம் நினைக்காமல் இருக்கும்படியும் ஆகிறது (அதாங்க வேண்டாத வார்த்தைகள் வந்து சண்டை)

மெளனத்தில் இருக்கும் சுகமே தனி தான். (வருடத்தில் ஒரு நாளேனும்.)

நல்ல படைப்பு.

 
At Thursday, November 09, 2006 7:53:00 PM, Blogger சத்தியா said...

ம்... கவிதையிலும் அசத்திறீங்களே!

வாழ்த்துக்கள்.

 
At Thursday, November 09, 2006 9:18:00 PM, Blogger sooryakumar said...

கவிதகள் நன்று. உங்களிடம் உள்ள அழகுணர்வு எனக்குப் பிடிச்சிருக்கு.

 
At Thursday, November 09, 2006 9:22:00 PM, Anonymous Anonymous said...

OMG OMG OMG...please dun put her face..just be orignal

 
At Friday, November 10, 2006 1:46:00 AM, Blogger G3 said...

Kavidhai superb :)

//பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில் //

Summa nachunnu solli irukkeenga :D

 
At Friday, November 10, 2006 8:39:00 AM, Blogger Unknown said...

அழகு

கவிதை
..

//பேசிக் கொள்ளும் போது
ஏதேதோ சிந்தனைகள்//

ஆம்

சொன்ன வார்த்தையா,
சொல்லிய குரலிலா,
தடம் புரளத்தான்
செய்யுது மனம்..

 
At Friday, November 10, 2006 11:15:00 AM, Blogger தாரிணி said...

நன்மனம்,
--பேசிக் கொள்ளும் போது
ஏதேதோ சிந்தனைகள்..--

//சில சமயம் நினைக்காமல் இருக்கும்படியும் ஆகிறது (அதாங்க வேண்டாத வார்த்தைகள் வந்து சண்டை)//

ம்ம்.. அப்படியும் ஒரு கோணம் இருக்கிறது இல்லையா.. சரிதான்..

//மெளனத்தில் இருக்கும் சுகமே தனி தான். (வருடத்தில் ஒரு நாளேனும்.)
நல்ல படைப்பு. //

மிக்க நன்றி நன்மனம்..

 
At Friday, November 10, 2006 11:16:00 AM, Blogger தாரிணி said...

சத்தியா
/ம்... கவிதையிலும் அசத்திறீங்களே!
வாழ்த்துக்கள்./

நன்றி சத்தியா.

 
At Friday, November 10, 2006 11:16:00 AM, Blogger தாரிணி said...

sooryakumar,

/கவிதகள் நன்று. உங்களிடம் உள்ள அழகுணர்வு எனக்குப் பிடிச்சிருக்கு/

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

 
At Friday, November 10, 2006 11:22:00 AM, Blogger தாரிணி said...

Anonymous,

/OMG OMG OMG...please dun put her face..just be orignal/

அனானி, தயவு செய்து உங்கள் பெயரை அறிமுகப்படுத்திக் கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 
At Friday, November 10, 2006 11:23:00 AM, Blogger தாரிணி said...

G3

--Kavidhai superb :)

//பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில் //
Summa nachunnu solli irukkeenga :D--

மிக்க நன்றி G3.

 
At Saturday, November 11, 2006 9:41:00 AM, Blogger தாரிணி said...

மணி ப்ரகாஷ்
/அழகு கவிதை/

நன்றி மணிப்ரகாஷ்.

//பேசிக் கொள்ளும் போது
ஏதேதோ சிந்தனைகள்//

-ஆம் சொன்ன வார்த்தையா,
சொல்லிய குரலிலா,
தடம் புரளத்தான்
செய்யுது மனம்..--

உங்கள் மனசும் தடம் புரண்டு விட்டதா.. நன்றி உங்கள் வரவுக்கு..

 
At Saturday, November 11, 2006 4:30:00 PM, Anonymous Anonymous said...

பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில்.

அழகு கவிதை

 
At Saturday, November 11, 2006 10:33:00 PM, Blogger தாரிணி said...

வேதா,

-பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில் -
//அருமையோ அருமை:)//

நன்றி வேதா..


//பேசும் நேரம்
மாற்றிக் கொள்வது வெறும் வார்த்தைகள் தான்
பேசாமல் நோக்கும் போது
மாற்றிக் கொள்வது
சொல்லொண்ணா உணர்வுகளை:)//

அழகாக சொன்னீர்கள்.. மிக்க நன்றி வேதா உங்கள் கருத்துக்கு..

 
At Saturday, November 11, 2006 10:34:00 PM, Blogger தாரிணி said...

காண்டீபன் ,

//பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில்.

அழகு கவிதை//

மிக்க நன்றி காண்டீபன்.

 
At Sunday, November 12, 2006 5:22:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

இப்படி ஒரு படத்தை போட்டா படிக்காதவனுக்கும் கவிதை வருமே தாரிணி..
ரெண்டு டியூப் சாராய போதை இவ கண்ணுல

 
At Sunday, November 12, 2006 7:09:00 AM, Blogger சாத்வீகன் said...

நன்று...

//பேசாமல் இருந்தால்
//நீ மட்டும் தானே
//நினைவில்

பேசாமல் இருக்கும்போது ஏன் பேசவில்லை என்ற கவலை எண்ணங்களால் நிறையும் மனது..

 
At Monday, November 13, 2006 1:04:00 PM, Blogger தாரிணி said...

Karthikeyan Muthurajan,

/இப்படி ஒரு படத்தை போட்டா படிக்காதவனுக்கும் கவிதை வருமே தாரிணி..
ரெண்டு டியூப் சாராய போதை இவ கண்ணுல /

சிலசமயம் இப்படித்தான் கார்த்திக்.. படத்தைப் பார்த்த 'கிக்'கில் கவிதை வந்து விடுகிறது.. அப்படி வந்த வார்த்தைகள் தான் இதுவும்..

நன்றி கார்த்திக்.

 
At Monday, November 13, 2006 1:05:00 PM, Blogger தாரிணி said...

சாத்வீகன்
//நன்று...

பேசாமல் இருக்கும்போது ஏன் பேசவில்லை என்ற கவலை எண்ணங்களால் நிறையும் மனது..//

உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சாத்வீகன்..

 
At Tuesday, November 14, 2006 1:15:00 AM, Blogger EarthlyTraveler said...

//சிலசமயம் இப்படித்தான் கார்த்திக்.. படத்தைப் பார்த்த 'கிக்'கில் கவிதை வந்து விடுகிறது.. அப்படி வந்த வார்த்தைகள் தான் இதுவும்..//
ஓ!அழகாக எழுதி உள்ளீர்கள் என சொல்ல வந்தேன்.அதற்கானக் காரணத்தையும் அறிந்து கொண்டேன்.ஆனாலும் கவிதை அற்புதம்.--SKM

 
At Tuesday, November 14, 2006 2:06:00 PM, Blogger தாரிணி said...

Sandai-Kozhi
/ஓ!அழகாக எழுதி உள்ளீர்கள் என சொல்ல வந்தேன்.அதற்கானக் காரணத்தையும் அறிந்து கொண்டேன்.ஆனாலும் கவிதை அற்புதம்.--SKM //

மிக்க நன்றி SKM மேடம்.

 
At Tuesday, November 14, 2006 6:07:00 PM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

//பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில். //

என்ன ஒரு சமாளிப்பு ;))
குறும்பு கொப்பளிக்கிறது தாரிணி :))

 
At Wednesday, November 15, 2006 8:48:00 AM, Blogger தாரிணி said...

Naveen Prakash

//பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில். //

//என்ன ஒரு சமாளிப்பு ;))
குறும்பு கொப்பளிக்கிறது தாரிணி :))//


நன்றி நவீன்..

 
At Friday, November 17, 2006 5:55:00 PM, Blogger Raghavan alias Saravanan M said...

"பேசிக் கொள்ளும் போது
ஏதேதோ சிந்தனைகள்..
பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில்"

- அனுபவப்பூர்வமான வரிகள் தாரிணி..

முதலில் பெயரைப் பார்த்ததும் பெண் என்று நினைத்தேன்.. புனைப்பெயரின் காரணம் சொல்வீர்களா?

ஆழ்ந்து எழுதுகிறீர்கள்.. எளிமையான இனிமையான கவிதைகள்..

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

 
At Saturday, November 18, 2006 7:36:00 PM, Blogger தாரிணி said...

இராகவன் (எ) சரவணன்,

//ஆழ்ந்து எழுதுகிறீர்கள்.. எளிமையான இனிமையான கவிதைகள்..//

உங்கள் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..

/புனைப்பெயரின் காரணம் சொல்வீர்களா?/

குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை இராகவன்.. எனக்கு பிடித்த பெயர்.. நான் 'கடல்கணேசன்' என்ற பெயரில் எழுதும் கட்டுரைகளுக்கும், இந்த பக்கத்தில் எழுதமுயற்சிக்கும் வேறு படைப்புகளுக்கும் அடிப்படையில் வித்தியாசம் உண்டு..

எனவே புனைப்பெயரில் எழுத முடிவு செய்தேன்..

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

 
At Sunday, February 18, 2007 7:49:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Xcellent.
So all the thoughts are only on her - right ?
May God Bless.

 

Post a Comment

<< Home