Sunday, December 10, 2006

காத்திருக்கிறேன்..



காத்திருக்கிறேன்..

தொட்டுச் செல்லும்
அலைகள் உண்டு,
தொடர்ந்து வருடும்
தென்றல் உண்டு..

தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை

* * * *

சோகக் கவிதை..


என்னை
காதல் நதியில்
நீந்த வைக்க
யார் கவிதையோ
வாசிக்கத் தந்தாய்..



இன்று
சோகக்கடலில்
மூழ்கடிக்க
என்னையே
சோதித்துப் பார்க்கிறாயே.


* * * *

சோகக் கவிதை

(அதேதான். வேறு வார்த்தைகளில்)


நான்
காதல் கவிதை
எழுதுவதைப் பார்க்க
உனக்கு
ஆசை வந்தது சரி..


போதுமென்று,
சோகக் கவிதையும்
வருகிறதா என்ற
சோதனை செய்யும்
நேரமா இது?

13 Comments:

At Sunday, December 10, 2006 10:43:00 AM, Anonymous Anonymous said...

கவிதை நல்லாருக்கு.
பொதுவாக பிரிவில் எழுதும் சோககவிதைகள்
தான் மனதை
பாதிக்கக்கூடியதாக இருக்கிறது
என்று
நினைக்கிறேன்.

 
At Sunday, December 10, 2006 2:49:00 PM, Blogger Sumathi. said...

ஹாய் தாரிணி,


//"தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை.."//

அப்ப்ப்ப்பாஆஆஆ,, அருமையோ அருமை.. simply superb..


//"இன்று
சோகக்கடலில்
மூழ்கடிக்க
என்னையே
சோதித்துப் பார்க்கிறாயே..."//

ம்ம்ம்ம்... ஏதேதோ சொல்ல தோனுது..ஆனா சோதிக்க விரும்பல...

 
At Monday, December 11, 2006 9:54:00 AM, Blogger G3 said...

Aaha.. as usual kalakkiteenga :)

 
At Tuesday, December 12, 2006 3:04:00 AM, Blogger Unknown said...

இந்த பக்கத்தில் சோகமா.. எதிர் பார்க்கவே இல்லை...

//தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை//


i need only kuchi ice cream,,,

 
At Tuesday, December 12, 2006 9:55:00 AM, Blogger EarthlyTraveler said...

I came to this page because உங்கள் கடலளவுப் பகுதியில் இருந்த இந்தக் கவிதையின் சோகம் ஈர்த்ததால்.
//தொட்டுத் தழுவ
கரமும் இல்லை..
தொடுவதற்கு
வரமும் இல்லை//--SKM

 
At Wednesday, December 13, 2006 3:12:00 AM, Anonymous Anonymous said...

nalla ezudhi irukkeenga

 
At Tuesday, December 19, 2006 10:21:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

ஈரம் நிறைந்த கவிதைகள் தாரிணி

 
At Thursday, December 21, 2006 12:41:00 AM, Blogger தாரிணி said...

@lakshmi

@sumathi

@G3

@மணி ப்ரகாஷ்

@Sandai-Kozhi

@Kittu

@மு.கார்த்திகேயன்

அனைவருக்கும் மிக்க நன்றி. மன்னிக்கவும். தனித்தனியே பதில் எழுத ஆசை தான்.. ஆனால், நேரம் இல்லையே.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.

 
At Friday, December 22, 2006 5:28:00 AM, Blogger Porkodi (பொற்கொடி) said...

hahaha ayyo amma yaaruyya inda dharini nu keka venden ellar kitayum patha adu ninga thana!! enna than vittu vechurkinga ninga?

 
At Sunday, December 24, 2006 12:46:00 PM, Blogger தாரிணி said...

பொற்கொடி,

தாரிணியை இப்போது தான் பார்க்கிறீர்களா?.. நன்றி பொற்கொடி..

 
At Sunday, February 18, 2007 8:04:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Sogathaiyum nirambavey nerthiyaai solli irukkindreergal.
May God Bless.

 
At Monday, February 19, 2007 8:29:00 AM, Blogger ஜி said...

என்னங்க இது... தமிழ்மணம் முழுவதும் உங்க பேர்தான் இருக்குது... என்ன பண்ணுனீங்க...

கவிதைகள் அருமை... நல்ல வேளை டிசம்பர்ல எழுதியிருக்கீங்க... பிப்ரவரி கவிதையில்லையேன்னு பாத்தேன்... ;))

 
At Sunday, October 28, 2007 7:56:00 PM, Blogger A said...

உங்கள் காவிதை அனைத்தும் அருமை

பொறுமை இல்லையா?


என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறாய்
பொறுமை இல்லையா
என்றேன் நான்..

என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறேன்
பொறுமை எதற்கு
என்றாய் நீ..


அருமை


நான்
காதல் கவிதை
எழுதுவதைப் பார்க்க
உனக்கு
ஆசை வந்தது சரி..


போதுமென்று,
சோகக் கவிதையும்
வருகிறதா என்ற
சோதனை செய்யும்
நேரமா இது?

மிகவும் அருமை :'(

 

Post a Comment

<< Home